Monday, May 4, 2009

கைக்குட்டை

எனக்கு முன்

என் மனைவியின்

கரம் பிடித்த

கள்ள காதலன் ....

வியர்வையின்

மதிப்பீடளந்த

முதலாளி ....

Thursday, March 26, 2009

வாழ்க்கை

மேடு

வலி தெரியா பயணம்

வழி தெரிந்த பயணம்


பள்ளம்

வழி தெரியா பயணம்

வலி தெரிந்த பயணம்

காதல்

புத்தரின் மூடிய விழியும்

உன் மௌனமும்

என்றும் திறப்பதில்லை

என் காதலின் கருணைக்காக .....

கடிகாரம்

முடிவில்லா முட்களின்

பயணம்

முதல் முடிவின்

அறிவிப்பு சின்னமாய்......