Friday, September 19, 2008

கூடற்ற குயில்கள்(முதியோர் இல்லம்)

உதிர்த்த இலைகளோ
உண்மையறியா உச்சத்தில்

முதிர்ந்த கிளைகளோ
முதியோர் இல்லத்தில்

சுமையாய் ஆனதோ
சுமந்த பொதிகளுக்கே
கூடற்ற இந்த
கூண்டு குயில்கள்

குஞ்சுகளின்
குத்தல் வெப்பத்தில்
பொசுங்கிய பொதிமூட்டையாய்

உதறிய உறவுகள் எண்ணி
உலர்ந்த வாழ்நாள் எண்ணி
மரணித்த
மனித உள்ளங்களாய் வாழும்
புனித ஆலயம்
இந்த
புதியதோர் இல்லம்

Wednesday, September 17, 2008

கண்டேன்

உனை காணும்
ஒவ்வொர் நொடியும்
மரணித்து ஜீவிக்கிறேன்
முழு மனிதனாய்

Friday, September 12, 2008

கல்லறை


உன் இதய கல்லறையில்
விதைத்த பீடம்
என் காதல்

காதல் காவியங்களே
கல்லறைகளானால்........
காதலிகள் அங்கே
கால தூதுவர்

Wednesday, September 10, 2008

காதல் வான எல்லையில்


உன் வான எல்லைக்குள்
இடறிய என் இதயம்
அழுகிறதோ மழையாய்
மின்னலாய்
தோன்றி
மறையும்
உன் வருகையால்

வானவில்லாய்
நீ அணியும் புடவை
காண கிடைக்கும் அரிதாய்

கலக்கலாம் என்கிறதோ
என் மனம்
கலைகிறாய் மேகமாய்

துடிக்கிறதோ என் இதயம்
நெஞ்சாங்கூட்டில் இடியாய்

Tuesday, September 9, 2008

முனிவர்

சுகமில்லை
சோகமில்லை
விழிகளில் நீர்
முற்றும் துறந்த வெங்காயம் .....

தேசப் பற்று

ஓவியமாய் அவள்
வரைந்தவனுக்கல்லவோ
தெரியும்
மனதின் வலி

எங்கே தெரியும்
பார்ப்பவனுக்கும்
வீசியவனுக்கும்

குப்பை கூடையில்
பாரத அன்னை
இந்திய வரைபடமாக ...........

விடியல் தேடும் இரவுகள்

இரவு நேர பயணம்
பலாக்கயாய் மனம்
இனிப்பின்றி

ஆங்காங்கே மனித கூட்டம்

சந்தடி தெருவின் சாக்கடைகள்

சாஷ்டங்கமாய் விழமுடியா
நெருக்கல் கோவில்கள்

அலட்சியமாய்
பார்க்கும்
ஆறேழு மாடி கட்டிடங்கள்

வனங்களேயில்லா
வழித் தடங்கள்

பெற்ற குழந்தைக்காய்
இன்சியல் தேடும் அன்னைகள்

அரவணைக்க அன்னை
தேடும் சிறார்கள்

வாக்காளர் தேடும்
தந்திர அரசியல்வாதிகள்

காக்கைகள் தேடும்
தலைவர்கள்

நிழல் தேடும்
நிஜங்கள்

இதுவா
தேடல்கள்

மானிட தேடல்களோ
மலிவுற

மரண ஒலங்களோ
இங்கே பொலிவுற

இன்னும் பயணிக்கிறேன்
இதைக் காண இயலாத நாள் வரை

பட்டியல் பாரதம்

கந்தலாடையும்
காவியங்கியும்
இந் நாட்டின்
தேசிய சின்னமாய்

அநாதைகளும்
அவலைகளும்
இந் நாட்டின்
சாபக் கேடாய்

வறுமையும்
பட்டினியும்
இந் நாட்டின்
தேசிய கொடியாய்

ஊழல் வாதியும்
ஊரை ஏமாற்றுபவனும்
இந் நாட்டின்
தேசிய தலைவராய்

மத வெறியும்
மனித வெடியும்
இந் நாட்டின்
முதுகெலும்பாய்

இருப்பினும்
அன்பும்
கண்ணியமும்
கலாச்சாரமும்
இந் நாட்டின்
நாணயத்தின் இருபக்கங்களாய்

பசி

மழை நேர வானவில்
கடலோர மணல்
கவி பாடும் காதலர்கள்
பாதம் தொடும் அலை
ரசிக்க தோன்றவில்லை
பசியால்

Monday, September 8, 2008

வருகை

ஓரு துளி புன்னகை
ஒரு துளி கண்ணீர்
உன் வருகையால்
என் மனதில்
மழையாய்