Saturday, October 29, 2011

சலனம்

அந்த பவுர்ணமி இரவில்
அவள் நீரோடையில் நீராடிய போது
அவள் பேரழகில்
சலனமானது
நீரோடை மட்டுமல்ல
நீரோடையில் வீழ்ந்த
நிலவும் கூடத்தான்

Thursday, October 6, 2011

நிலா முகம்

நான் சொந்தங்களிடம் பாசத்தை மட்டுமே எதிர் பார்த்தேன் அவர்களோ பணத்தை கேட்பானோ என்று நினைத்து பாசத்தையும் மறைத்து விட்டார்கள் .... நான் நிலா மாதிரி வாழ ஆசை படுகிறேன். நான் சூரியன் மாதிரி வாழவோ அல்லது நிறைய நட்சத்திரங்களில் ஒன்னாக வாழவோ ஆசை படலை. சூரியன் தன்ன சுற்றியிருக்கிற எல்லோரையும் மறச்சிட்டு தான் மட்டும் ஒலிர நினைக்கும். ஆனா நிலா தன்ன சுற்றியிருக்கிற நட்சத்திரங்களையும் ஒலிர வச்சு தான்னும் ஒலிறும். அதனலதான் என்னவோ எல்லோறுக்கம் நிலவ ரொம்ப புடிக்குதுன்னு நினைக்கிறேன். ஒரு நிலா இரவுல நான் என்னொட உறவுகளோட குதிர வண்டியில ஒத்த ஆடு, அடுப்பு, விறகு எல்லாம் கொண்டுட்டு போன சந்தோசம். அன்னைக்கு நிலவோடு ஆரம்பித்த பயணம் இன்னும் தொடருது. இரவில நிலா எதயோ தேடி பூமில பயணிக்க என்னோட பயணமும் நிலா கூட பயணிக்குது.. ஆளில்லா ஊரில விளக்கில்லாமல் இருக்கலாம்.. ஆனா நிலா அங்கேயும் எதயோ தேடி பயணிக்குது. நிலா என்னோட உறவுக்கு ஒரு பாலமா இருந்திருக்கு. என்னோட கடந்த தலைமுறைகளுக்கும் என்னை கடந்து வரும் தலைமுறைகளுக்கும் நிலவோடு பயணமும், உறவும் தொடருதுங்கிறது எவ்வளவு சந்தோசம். என்னோட சிறு பிரயாயத்தில் நிலவுல ஆர்ம்ஸ்ட்ராங் மட்டும்தான் கால வச்சானா நானும் வைக்கிறேனு சொல்லி தண்ணியில தெரிந்த நிலா மேல காலை வச்சது இன்னைக்கு நினைச்சாலும் சிரிப்பா இருக்கும்.. வீடு இல்லாதா, கூரை இல்லாதா மனிதனுக்கும் நிலவுக்கும் உள்ள பந்தம் மனதுக்கும் காதலுக்கும் உண்டான பந்தம். நான் பல நேரங்களில் பேச நினைத்த நிலா அல்லது என்னோட இன்னமும் பேசாத நிலா. என்னோட அப்பா சின்ன வயதில் நிலாவ பார்த்துகிட்டே சொன்ன கதைகள்.. அப்பா அப்ப நிலவ பார்த்துகிட்டே சொன்ன கதைகள் இப்ப நியாபகம் இல்ல.. அப்பாவும் இப்ப இல்ல...ஆன நான் பார்த்த நிலா மட்டும் இப்பவும் என் கூட அல்லது நான் நிலவா கூட. சோழன் பார்த்து காதல் மொழி பேசிய அதே நிலாவதான் இன்னைக்கு நானும் பார்த்து காதல் மொழில் பேசுறேன்கிறதே எனக்கு புல் அரிப்ப தருது உடம்பெல்லாம்.. எல்லோருக்கும் சொந்த ஊருக்கு போறதுன்ன சொர்கத்துக்கு போறது மாதிரி சந்தோசம்..அதுவும் என்னை மாதிரி ஒருத்தன்னுக்கு . சின்ன வயசிலேயே அழகாபுரம் ஊர விட்டு அப்பாவோட வேலை காரணம்மா பாம்பே வந்ததுதான். இப்போ திருவிழாவுக்கு ஊருக்கு போயிட்டு எனக்கு பொண்ணு பார்க்கிறது மாதிரி அப்பா அம்மாவோட பிளான்.
ஊருக்கு போற நினைப்பே என்னோட ஒரு வார வேலைக்கு வேட்டு வச்சுது.பறவைகள் கூட காலையில இறை தேட
போயிட்டு சாயங்காலம் கூட்டுக்கு வந்துரும்.ஆனா மனுசனோட வாழ்க்கையோ சொந்த பந்தங்கள பிரிஞ்சு பிறந்த இடத்த பிரிஞ்சு
வேலைக்காக வெளியிடம் போய் ஒண்டியா குடித்தனம் நடத்துற வாழ்க்கை.
என்னோட வாழ்க்கையில இழந்த விசயங்கள் ஏராளம். சின்ன வயசு நண்பர்கள், திருடி தின்கிற மாங்காய், பசலி தேச்ச
சிலேட்டு, பாசம்மான பாட்டி, ஊரு ஓர அம்மன் கோவில், ஆறு, ஊர் திருவிழா, ஐஸ்,திருவிழா அன்னிக்கு போடுற கிடா கறி இப்படி அடுக்கிட்டே போகலாம் .
மொத்ததுல நகரம் என்னோட வாழ்க்கையில் பறித்த இழப்பீடுகள் ஏராளம். நகரம் பணத்த கொடுத்து என்னோட பாசங்கள அந்நிய படுத்த வச்சுது.

...........................................
.............................................


பாரதி முரணான கவிதை. புதுமை பெண்களுக்காக பாரதி பெண் வேடமிட்டு போராட வந்துது மாதிரி தெரிவாள். அந்த பாரதியோட சாடல் இந்த சமூகத்த கத்தியால குத்துற மாதிரி இருக்கும். என்னோட பாரதியோட சாடல் ஊசியால குத்துற மாதிரி இருக்கும். சன்னமா பேச வேண்டிய இடத்துல்ல கூட ஒரே வார்த்தைல சத்தமில்லம்மா பேசுற அழகு. அவள் வானவில்லோட வர்ணம். ஓவியத்தோட உயிர் . பட்டாம்பூச்சிகளோட உறவு. பார்வைகளோட மாயை. தேவதைகளோட தேவதை. மொத்ததில உலகம் உச்சரிக்க மறந்த என்னோட மந்திரம் அவள்.
தமிழில ஆனா ஆவன்னாவையே எழுத்து கூட்டி வாசிச்ச என்னையே கவிதை எழுத வைத்த தமிழ் பத்திர காளி அவள். நான் அவளிடம் வரம் வாங்கிய காளிதாஸ். டீச்சர் இன்னா கடுமையா இருப்பாங்க.அவள பார்த்து குழந்தைகள் பயப்படும்மா இல்ல குழந்தைகள பார்த்து அவ பயப்படுவாளான்னு நினைச்சா சிரிப்பு தான் வரும்.