Thursday, July 1, 2010

வீடுகளோட விலாசங்கள் மாறுவதில்லை
அதில்
வசிக்கிற மனிதர்களோட விலாசங்கள் மட்டும்
மாறிட்டே இருக்கு..

காலணி

காலணிகளோட ஆதிக்கத்துல இருந்த எங்க காலனியில
என்னோட காலணி மட்டும் தனிமையுல இருந்துச்சு.
காலணிக்கும் தனிமைக்கும் என்ன தூரம்னு யோசிக்கச்சுல
காலணிக்கும் காலுக்கும் இடையில உள்ள தூரமோனு தோணுது
நான் தூரத்துல வரச்சுலையே என்னோட காலணி சத்தத வச்சு ஓடி வந்து பாக்குற
என்னோட மனைவி
என்னங்க எத்தனதடவ சொல்றது செருப்ப வீடுக்குள போட்டு வராதைங்கனு ...

நான் பரதன் ராமனோட காலணிய வச்சு ஆட்சி பண்ணின மாதிரி
ஆட்சி பண்ண சொல்லல
அலட்சிய படுத்தாதைங்கனுதான் சொல்றேன் ....

.................................
..................................
.
பாதணிகள் ஆமைகளோட ஓடுகள மாதிரி
பாதங்கள பாதுகாக்க மட்டுமில்ல
பாத சுவடுகள பதிவு செய்யவும்தான்......