அந்த பவுர்ணமி இரவில்
அவள் நீரோடையில் நீராடிய போது
அவள் பேரழகில்
சலனமானது
நீரோடை மட்டுமல்ல
நீரோடையில் வீழ்ந்த
நிலவும் கூடத்தான்
Saturday, October 29, 2011
Thursday, October 6, 2011
நிலா முகம்
நான் சொந்தங்களிடம்
பாசத்தை மட்டுமே எதிர் பார்த்தேன்
அவர்களோ
பணத்தை கேட்பானோ என்று நினைத்து
பாசத்தையும் மறைத்து விட்டார்கள் ....
நான் நிலா மாதிரி வாழ ஆசை படுகிறேன். நான் சூரியன் மாதிரி வாழவோ அல்லது நிறைய நட்சத்திரங்களில் ஒன்னாக வாழவோ ஆசை படலை.
சூரியன் தன்ன சுற்றியிருக்கிற எல்லோரையும் மறச்சிட்டு தான் மட்டும் ஒலிர நினைக்கும். ஆனா நிலா தன்ன சுற்றியிருக்கிற நட்சத்திரங்களையும் ஒலிர வச்சு தான்னும் ஒலிறும். அதனலதான் என்னவோ எல்லோறுக்கம் நிலவ ரொம்ப புடிக்குதுன்னு நினைக்கிறேன்.
ஒரு நிலா இரவுல நான் என்னொட உறவுகளோட குதிர வண்டியில ஒத்த ஆடு, அடுப்பு, விறகு எல்லாம் கொண்டுட்டு போன சந்தோசம். அன்னைக்கு நிலவோடு ஆரம்பித்த பயணம் இன்னும் தொடருது. இரவில நிலா எதயோ தேடி பூமில பயணிக்க என்னோட பயணமும் நிலா கூட பயணிக்குது..
ஆளில்லா ஊரில விளக்கில்லாமல் இருக்கலாம்.. ஆனா நிலா அங்கேயும் எதயோ தேடி பயணிக்குது. நிலா என்னோட உறவுக்கு ஒரு பாலமா இருந்திருக்கு. என்னோட கடந்த தலைமுறைகளுக்கும் என்னை கடந்து வரும் தலைமுறைகளுக்கும் நிலவோடு பயணமும், உறவும் தொடருதுங்கிறது எவ்வளவு சந்தோசம்.
என்னோட சிறு பிரயாயத்தில் நிலவுல ஆர்ம்ஸ்ட்ராங் மட்டும்தான் கால வச்சானா நானும் வைக்கிறேனு சொல்லி தண்ணியில தெரிந்த நிலா மேல காலை வச்சது இன்னைக்கு நினைச்சாலும் சிரிப்பா இருக்கும்..
வீடு இல்லாதா, கூரை இல்லாதா மனிதனுக்கும் நிலவுக்கும் உள்ள பந்தம் மனதுக்கும் காதலுக்கும் உண்டான பந்தம்.
நான் பல நேரங்களில் பேச நினைத்த நிலா அல்லது என்னோட இன்னமும் பேசாத நிலா.
என்னோட அப்பா சின்ன வயதில் நிலாவ பார்த்துகிட்டே சொன்ன கதைகள்..
அப்பா அப்ப நிலவ பார்த்துகிட்டே சொன்ன கதைகள் இப்ப நியாபகம் இல்ல..
அப்பாவும் இப்ப இல்ல...ஆன நான் பார்த்த நிலா மட்டும் இப்பவும் என் கூட அல்லது நான் நிலவா கூட.
சோழன் பார்த்து காதல் மொழி பேசிய அதே நிலாவதான் இன்னைக்கு நானும் பார்த்து காதல் மொழில் பேசுறேன்கிறதே எனக்கு புல் அரிப்ப தருது உடம்பெல்லாம்..
எல்லோருக்கும் சொந்த ஊருக்கு போறதுன்ன சொர்கத்துக்கு போறது மாதிரி சந்தோசம்..அதுவும் என்னை மாதிரி ஒருத்தன்னுக்கு . சின்ன வயசிலேயே அழகாபுரம் ஊர விட்டு அப்பாவோட வேலை காரணம்மா பாம்பே வந்ததுதான். இப்போ திருவிழாவுக்கு ஊருக்கு போயிட்டு எனக்கு பொண்ணு பார்க்கிறது மாதிரி அப்பா அம்மாவோட பிளான்.
ஊருக்கு போற நினைப்பே என்னோட ஒரு வார வேலைக்கு வேட்டு வச்சுது.பறவைகள் கூட காலையில இறை தேட
போயிட்டு சாயங்காலம் கூட்டுக்கு வந்துரும்.ஆனா மனுசனோட வாழ்க்கையோ சொந்த பந்தங்கள பிரிஞ்சு பிறந்த இடத்த பிரிஞ்சு
வேலைக்காக வெளியிடம் போய் ஒண்டியா குடித்தனம் நடத்துற வாழ்க்கை.
என்னோட வாழ்க்கையில இழந்த விசயங்கள் ஏராளம். சின்ன வயசு நண்பர்கள், திருடி தின்கிற மாங்காய், பசலி தேச்ச
சிலேட்டு, பாசம்மான பாட்டி, ஊரு ஓர அம்மன் கோவில், ஆறு, ஊர் திருவிழா, ஐஸ்,திருவிழா அன்னிக்கு போடுற கிடா கறி இப்படி அடுக்கிட்டே போகலாம் .
மொத்ததுல நகரம் என்னோட வாழ்க்கையில் பறித்த இழப்பீடுகள் ஏராளம். நகரம் பணத்த கொடுத்து என்னோட பாசங்கள அந்நிய படுத்த வச்சுது.
...........................................
.............................................
பாரதி முரணான கவிதை. புதுமை பெண்களுக்காக பாரதி பெண் வேடமிட்டு போராட வந்துது மாதிரி தெரிவாள். அந்த பாரதியோட சாடல் இந்த சமூகத்த கத்தியால குத்துற மாதிரி இருக்கும். என்னோட பாரதியோட சாடல் ஊசியால குத்துற மாதிரி இருக்கும். சன்னமா பேச வேண்டிய இடத்துல்ல கூட ஒரே வார்த்தைல சத்தமில்லம்மா பேசுற அழகு. அவள் வானவில்லோட வர்ணம். ஓவியத்தோட உயிர் . பட்டாம்பூச்சிகளோட உறவு. பார்வைகளோட மாயை. தேவதைகளோட தேவதை. மொத்ததில உலகம் உச்சரிக்க மறந்த என்னோட மந்திரம் அவள்.
தமிழில ஆனா ஆவன்னாவையே எழுத்து கூட்டி வாசிச்ச என்னையே கவிதை எழுத வைத்த தமிழ் பத்திர காளி அவள். நான் அவளிடம் வரம் வாங்கிய காளிதாஸ். டீச்சர் இன்னா கடுமையா இருப்பாங்க.அவள பார்த்து குழந்தைகள் பயப்படும்மா இல்ல குழந்தைகள பார்த்து அவ பயப்படுவாளான்னு நினைச்சா சிரிப்பு தான் வரும்.

Thursday, May 19, 2011
முதிரா
" ரயிலோட சத்தம் காதவிட்டு போனாக்கூட அதோட அதிர்வுகள் மட்டும் என்னோட மனசுக்குள்ள ஒலிச்சுகிட்டே இருந்துச்சு ..."
வாழ்க்கையோட விதைகள்தான் சொந்தங்கள். நாளாக நாளாக அங்க அங்க பரவி தன்னோட ஆதாரங்கள மறந்து தங்களுக்குளே சண்டையிடுற இனம்தான் மானுட இனம்.....
இரவு 12:30 மணி.செல்லுலார் உலகமே தன்ன சுவிட்ச் ஆப் பண்ணியிருந்தது. ஆனா என்னோட அம்மா மட்டும் ஜன்னல் பக்கம் நின்னு அப்பாவுக்குகாக காத்துக்கிட்டுயிருந்தா...
12 மணி ரயில் போயிடுச்சு அவோல காணும்முன்னு அம்மா புலம்பிட்டு இருந்தா..
அப்பா வர்றத அவரோட பூட்ஸ் சத்தத வச்சே தெரிஞ்சுகிடுவா...அவளோட பாதி இரவுகள் ஜன்னலோட தான் கழியும் ..
என்னோட வீட்டு பக்கத்துலதான் முதிரா அக்கா வீடு ..... என்னோட சின்ன உலகத்துல வந்த தேவதை..அவளோட கற்பனைகளின் காதலன் நான்.
அவளோட லைப்ரரி புத்தகங்களோட காதல் தூதுவன் நான்...அந்த புத்தகங்கள படிச்சிட்டு அவ கற்பனை கலந்து சொல்ற கதைகளின் சிநேகிதன் நான் ...
உலகம் எவ்வளவு பெருசுக்கா ... அது நம்மூர் தண்டவாளம் மாதிரி ரொம்ப பெரிசுடா ...
என்னோட எல்லா கேள்விக்கும் முதிரா அக்கா பதிலா இருப்பா ..
அது ஒரு கோடை விடுமுறை நாள். நான் கிரிக்கெட் விளையாட போயிட்டு வீட்டுக்கு வந்தேன் ..முதிரா அக்கா வீட்டுல இருந்து ஒரே அழுக சத்தம்...முதிரா அக்கா நம்மள விட்டுட்டு போயிட்டான்னு அம்மா அழுதுக்கிட்டே சொன்னா...
அன்னைக்கு என்னோட வாழ்க்கையோட நீங்க முடியாத சோகம்மானா முதிரா அக்கா .
என்னோட விசும்பல் இந்த உலகத்துக்கு கேட்டுச்சோ இல்லையோ ஆனா என்னோட முதிரா அக்காவுக்கு கண்டிப்பா கேட்டிருக்கும்
முதிரா அக்காவ பத்தி ஊருக்குள ஒரு சிலபேர் அவள ஒருத்தன் காதலிச்சு ஏமாத்திட்டதாகவும் ஒரு சிலபேரு அவ காதலுக்கு அவங்க அப்பா அம்மா சம்மதிக்காதனாளும்தான் அவ ரயில் விழுந்து இறந்துட்டாங்கன்னு பேசிக்கிட்டாங்க ...
அந்த இரவு நெடு இரவா இருந்துச்சு..ராத்திரி பன்னண்டு மணி ரயில் போனதுக்கு அப்புறமும் முதிரா அக்கா வீட்டுல இருந்து அழுக சத்தம் கேட்டுகிட்டு இருந்துச்சு..
முதிரா அக்காவ ரயில்வே ஸ்டேஷன் பக்கத்துல பார்த்ததாகவும் அவா அவங்கள பயமுறுத்துனதாகவும் எல்லோரும் சொன்னாங்க ...அக்காவே பயந்த சுபாவம் அவங்க எப்படி பயமுறுத்துவாங்கன்னு எனக்கு சிரிப்புதான் வந்துச்சு..
அன்னைக்கு டியூஷன் முடிச்சுகிட்டு ரயில் தண்டவாளத்து வழியா வரச்சுல என்னையும் அறியாம கால்கள் வேகமா சைக்கிள் பிடல மிதிக்க ஆரம்பிச்சுது ...
எப்பவுமே முதிரா அக்காவ பாக்கன்னுமின்னு துடிக்கிற என் மனசு அன்னைக்கு மட்டும் ஏன் அவ்வளவு வேகம்மா சைக்கிள்ள மிதிச்சுதுன்னு எனக்கு இன்னமும் தெரியல ..
சந்திரா என்னோட வாடா..அக்கா கூட பேச யாரும்மே இல்லன்னு முதிரா அக்கா கூப்பிட்டா ...கண் விழிச்சு பார்த்தா பன்னண்டு மணி ரயில் போய்ட்டு இருந்துச்சு ..
ரயிலோட சத்தம் காதவிட்டு போனாக்கூட அதோட அதிர்வுகள் மட்டும் என்னோட மனசுக்குள்ள ஒலிச்சுகிட்டே இருந்துச்சு ...
ரயில் பயணம்ங்கிறது ஒரு குதுகல பயணம்....
ஆனா என்னோட இப்போதைய ரயில் பயணங்கள் முதிரா அக்காவ நியாபக படுத்தி கலங்கடிகுது..
அம்மா இன்னமும் சொல்லுவா ..உன்னை பெத்தது மட்டும்தாண்ட நானு வழத்ததெல்லாம் முதிரா அக்கான்னு ....
இந்த உலகுள எல்லா உறவுகளும் எதையோ எதிர்பார்க்கும் ..ஆனா முதிரா அக்கா மட்டும் என்னோட அன்ப எதிர்பார்த்துச்சு..
சந்திரன் முதிரா கதைய தொடர் கதையா எழுதுங்க..இல்ல சார் முதிராவோட கதை தொடர் கதையா ஆகக்கூடாது ..

Thursday, April 7, 2011
தென்றல்
அவன் அவள்
பயணங்களில்
மூன்றாவதாக
காற்றும் பயணிக்க ...
அவர்களோட பயணம்
என்றாவது
முடிவடையும்
ஆனால் கற்றோட
பயணம்
அவர்களோட வரலாற சுமந்துகிட்டு
பயணிக்கும்....
கனவுகளோடு பயணிக்காத
மானுடம் கூட
காற்றோட பயணிக்கணும்...
குயில்களோட கூவல்
குழல்களோட நாதம்
குழந்தையின் அழுகை
அலைகளின் எழுச்சி
அருவியின் ஓசை
மானிட ஓலம்
மலரின் வாசம்
ஏழையின் கண்ணீர்
எயிப்பவர் கோபம்
சந்தோசம்
துக்கம் எல்லாத்தையும்
சுமந்துகிட்டு
மெளனமாக
பயணிக்கிற காற்று....
புல்லாங்குழலோட
துவாரம் நுழைந்து
நாதம் இசைக்கும்
காற்று
மனித புல்லாங்குழல்
நாசியில் நுழைந்து
உயிர் நாதம்
இசைக்கும்...........
மானுடத்துக்கும்
காற்றுக்கும்
உள்ள நெருக்கம்
மனிதனுக்கும்
அவனுடைய தாயின்
கருவறைக்கும்
உள்ள நெருக்கம் ......
காதலனோட
மூச்சு காற்று கூடே
காதலிக்கு
தூதாய்....
மறைந்து போன
காதலியோட
நினைவுகள சுமந்துகிட்டு
அவளோட மூச்சு காற்று கலந்த
இந்த உலகத்துல
அதை சுவாச்சுகிட்டு
வாழுற வாழ்க்கை
சொர்க்கத்த விட மேல் ...........
ஏழை
பணக்காரன்
நாடு
நாமுன்னு
எந்த வேறுபாடும்
இல்லாம பயணப்படும்
காற்று....
பயணங்களில்
மூன்றாவதாக
காற்றும் பயணிக்க ...
அவர்களோட பயணம்
என்றாவது
முடிவடையும்
ஆனால் கற்றோட
பயணம்
அவர்களோட வரலாற சுமந்துகிட்டு
பயணிக்கும்....
கனவுகளோடு பயணிக்காத
மானுடம் கூட
காற்றோட பயணிக்கணும்...
குயில்களோட கூவல்
குழல்களோட நாதம்
குழந்தையின் அழுகை
அலைகளின் எழுச்சி
அருவியின் ஓசை
மானிட ஓலம்
மலரின் வாசம்
ஏழையின் கண்ணீர்
எயிப்பவர் கோபம்
சந்தோசம்
துக்கம் எல்லாத்தையும்
சுமந்துகிட்டு
மெளனமாக
பயணிக்கிற காற்று....
புல்லாங்குழலோட
துவாரம் நுழைந்து
நாதம் இசைக்கும்
காற்று
மனித புல்லாங்குழல்
நாசியில் நுழைந்து
உயிர் நாதம்
இசைக்கும்...........
மானுடத்துக்கும்
காற்றுக்கும்
உள்ள நெருக்கம்
மனிதனுக்கும்
அவனுடைய தாயின்
கருவறைக்கும்
உள்ள நெருக்கம் ......
காதலனோட
மூச்சு காற்று கூடே
காதலிக்கு
தூதாய்....
மறைந்து போன
காதலியோட
நினைவுகள சுமந்துகிட்டு
அவளோட மூச்சு காற்று கலந்த
இந்த உலகத்துல
அதை சுவாச்சுகிட்டு
வாழுற வாழ்க்கை
சொர்க்கத்த விட மேல் ...........
ஏழை
பணக்காரன்
நாடு
நாமுன்னு
எந்த வேறுபாடும்
இல்லாம பயணப்படும்
காற்று....
Subscribe to:
Posts (Atom)